இந்தியா

மது குடிக்கவைத்து பாலியல் வன்கொடுமை..சிறுவனை கொடுமைப்படுத்திய டியூஷன் டீச்சர் கைது..கேரளாவில் அதிர்ச்சி !

11-ம் வகுப்பு படிக்கும் மாணவனை டியூஷன் டீச்சர் மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிக்கவைத்து பாலியல் வன்கொடுமை..சிறுவனை கொடுமைப்படுத்திய டியூஷன் டீச்சர் கைது..கேரளாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலகம் திருச்சூரில் 34 வயதான கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். அதன்பின்னர் கொரோனா காரணமாக போதிய வருமானம் இல்லாத நிலையில், அந்த பகுதி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துவந்துள்ளார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் டியூஷன் சென்றுவந்துள்ளார். அப்போது அந்த மாணவனுக்கு அளவுக்கு அதிகமான அளவு மதுவை அந்த பெண் கொடுத்துள்ளார். பின்னர் மாணவர் மயக்க நிலைக்கு சென்றதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மது குடிக்கவைத்து பாலியல் வன்கொடுமை..சிறுவனை கொடுமைப்படுத்திய டியூஷன் டீச்சர் கைது..கேரளாவில் அதிர்ச்சி !

இதுபோன்ற செயல் தொடர்ந்து நடந்துவந்த நிலையில், மாணவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்துள்ளது. சரியாக படிக்க முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிடும் அந்த மாணவர் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளி சார்பில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.

அப்போது மாணவர் தனக்கு டியூஷன் செல்லும்போது நடத்த கொடுமைகள் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனநல ஆலோசகர் இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

மது குடிக்கவைத்து பாலியல் வன்கொடுமை..சிறுவனை கொடுமைப்படுத்திய டியூஷன் டீச்சர் கைது..கேரளாவில் அதிர்ச்சி !

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ வழக்கு பதிவு செய்த போலிஸார் டியூஷன் எடுத்த அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories