இந்தியா

பேசிக்கொண்டிருக்கும்போதே அரசு ஊழியரை கன்னத்தில் அடித்த பா.ஜ.க MP.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. Viral Video !

பாஜக எம்.பி ஒருவர் அரசு ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேசிக்கொண்டிருக்கும்போதே அரசு ஊழியரை கன்னத்தில் அடித்த பா.ஜ.க MP.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. Viral Video !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வி.சோமண்ணா கிராமம் ஒன்றுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரிடம் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நிலம் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் அந்த பெண்ணின் கன்னத்தில் அடித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் அது பாஜக அரசுக்கு பெரும் பிரச்சனையாக மாறியது. அதனைத் தொடர்ந்து பெண்ணை அடித்த அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே அரசு ஊழியரை கன்னத்தில் அடித்த பா.ஜ.க MP.. ராஜஸ்தானில் அதிர்ச்சி.. Viral Video !

இந்த நிலையில், கர்நாடகாவில் நடத்த இந்த சம்பவம் போல தற்போது ராஜஸ்தானிலும் நடந்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு சித்ரோகர் எம்.பியாக சந்திர பிரகாஷ் ஜோஷி என்பவர் இருந்து வருகிறார்.

இவர் அந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் அரசு அதிகாரி ஒருவர் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் எதோ சொல்ல இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்.பி அவரை சற்றும் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதனை அங்கு இருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், பலரும் அமைச்சரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories