இந்தியா

சத்தீஸ்கரில் இந்துத்வ கும்பல் அராஜகம்: மாட்டிறைச்சி கடத்தியதாக கூறி 2 பேர் நிர்வாணமாக்கி தாக்குதல்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி இரண்டை பேரை அடித்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் இந்துத்வ கும்பல் அராஜகம்: மாட்டிறைச்சி கடத்தியதாக கூறி 2 பேர் நிர்வாணமாக்கி தாக்குதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ குண்டர்கள் பலர் பல்வேறு வன்முறை செயல்களிலும், கும்பல் தாக்குதல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு எதிராகப் புகாரளித்தாலும் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் குற்றம் புரிபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாகக் கூறி இரண்டு பேரை அடித்து அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இந்துத்துவ கும்பல் அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், சக்கர்பதா பகுதியில் நர்சிங் தாஸ், ராம்நிவாஸ் மெஹர் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனத்தில் ஒரு மூட்டை இருந்துள்ளது. இதைப்பார்த்த இந்துத்துவ கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

பின்னர், மூட்டையில் மாட்டிறைச்சி கடத்தி செல்வதாகக் கூறி இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் ஆடைகளைக் கிழத்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து இருவரும் மாட்டிறைச்சி கடத்தி செல்வதாகக் கூறி போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

சத்தீஸ்கரில் இந்துத்வ கும்பல் அராஜகம்: மாட்டிறைச்சி கடத்தியதாக கூறி 2 பேர் நிர்வாணமாக்கி தாக்குதல்!

இதனைத் தொடர்ந்து போலிஸார், பாதிக்கப்பட்ட இருவர் மீதுமே வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்களைக் கொடூரமாகத் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலிஸார் எடுக்கவில்லை. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குபதிவு செய்த சத்தீஸ்கர் போலிஸாருக்கு சமூகவலைதளத்தில் இணைய வாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories