இந்தியா

BREAK UP செய்த காதலி.. ஆத்திரத்தில் திட்டமிட்டு காதலன் செய்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய சம்பவம் !

BREAK UP செய்த ஆத்திரத்தால் காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAK UP செய்த காதலி.. ஆத்திரத்தில் திட்டமிட்டு காதலன் செய்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

BREAK UP செய்த ஆத்திரத்தால் காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் பாரத்நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் சோனு என்ற இளைஞரும், சல்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பல ஆண்டுகளாக காதலித்து வந்தவர்கள், திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையினால் மனக்கசப்பு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது.

BREAK UP செய்த காதலி.. ஆத்திரத்தில் திட்டமிட்டு காதலன் செய்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய சம்பவம் !

இதனால் காதலி, தனது காதலனுடனான காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி தனது முடிவை காதலனிடம் தெரிவிக்க, அதை கேட்டு அதிர்ச்சியுற்றார். மேலும் இப்படி செய்ய வேண்டாம் என்று காதலியிடம் கெஞ்சியுள்ளார். இருப்பினும் மனம் இறங்காத காதலி, தனது காதலனை விட்டு பிரிந்துள்ளார்.

இதனால் ஆத்திரப்பட்ட சோனு, காதலி சல்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று பகல் நேரத்தில் காதலியை பின்தொடர்ந்த சோனு, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் விழுந்த காதலியை கண்டதும் பதறி போன சோனு, துப்பாக்கியை அருகில் இருந்த குளத்தில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

BREAK UP செய்த காதலி.. ஆத்திரத்தில் திட்டமிட்டு காதலன் செய்த கொடூரம்.. டெல்லியை உலுக்கிய சம்பவம் !

பிறகு சல்மாவின் சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது குறித்து சோனு மீது சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை தேடினர். அவரது மொபைல் எண் உள்ளிட்டவற்றை தேடுகையில் அவர் காரில் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர், கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். BREAK UP செய்த ஆத்திரத்தால் காதலன், காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories