இந்தியா

"என்னை மன்னிச்சுருங்க.." - நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம்..

ஜெயின் கோயிலில் நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதம் எழுதியதோடு நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

"என்னை மன்னிச்சுருங்க.." - நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜெயின் கோயிலில் நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதம் எழுதியதோடு நகைகளை திருப்பி கொடுத்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் சாந்திநாத் திகம்பர் என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் புகழ் பெற்ற ஜெயின் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம், வெள்ளி பொருட்கள் திருடுபோனது.

"என்னை மன்னிச்சுருங்க.." - நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம்..

இதையடுத்து நகைகள் திருடப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு, அந்த கோயிலுக்கு அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அங்கிருந்த ஜெயின் குடும்பத்தினர், பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஒரு பை இருப்பதாக காவல்துறையினாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பையை மீட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் நகைகள் இருப்பதை கண்டு ஆச்சர்யப்பட்டனர். மேலும் அதில் ஒரு கடிதமும் இருந்தது. பின்னர், நகைகள் குறித்து விசாரிக்கையில் அது அந்த பகுதியிலுள்ள ஜெயின் கோயில் நகைகள் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த கடிதத்தை பிரித்து படித்து பார்த்ததில், மன்னிப்பு கேட்டு எழுதப்பட்டிருந்தது.

"என்னை மன்னிச்சுருங்க.." - நகைகளை திருடிய திருடன், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி கொடுத்த சம்பவம்..

அதாவது அந்த நகைகளை திருடிய திருடன், நகைகளை திருடியதாக மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த கடிதத்தில் தான் தெரியாமல் இந்த நகைகளை எடுத்துவிட்டதாகவும், இந்த நகைகள் தன்னிடம் வந்த பிறகு பல பிரச்னையை கண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை மன்னித்து விடுமாறும், இந்த நகைகளை நீங்களே வைத்து கொள்ளுமாறும் அதில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அந்த நகைகளை திருடிய திருடன் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைகளை திருடிய திருடன் மன்னிப்பு கடிதம் எழுதியதோடு, நகைகளை திருப்பி கொடுத்துள்ள நிகழ்வு மத்திய பிரதேசத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories