இந்தியா

புகார் அளித்த பெண்ணின் கன்னத்தில் அடித்த பாஜக அமைச்சர்.. காலில் விழுந்த பெண்..கர்நாடகாவில் அதிர்ச்சி !

புகார் அளித்த பெண்ணின் கன்னத்தில் அடித்த கர்நாடக பாஜக அமைச்சரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புகார் அளித்த பெண்ணின் கன்னத்தில் அடித்த பாஜக அமைச்சர்.. காலில் விழுந்த பெண்..கர்நாடகாவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சராக வி.சோமண்ணா என்பவர் இருந்து வருகிறார். இவர் பெண்ணை அடித்த புகார் ஒன்றில் சிக்கி அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கர்நாடகாவில் உள்ள சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக சென்றுள்ளார். அவரிடம் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நிலம் கிடைக்கவில்லை என புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த அமைச்சர் அந்த பெண்ணை திடீரென கன்னத்தில் அடித்துள்ளார். ஆனாலும் அந்த பெண் அவரின் காலில் விழுந்து தனக்கு நிலம் வழங்குமாறு கூறியது அவரின் வறுமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைத்தளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து அமைச்சர் வி.சோமண்ணா இந்த சம்பவம் தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பாஜக அமைச்சர்கள் இது போன்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது அரசியலில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories