இந்தியா

மனைவியுடன் சேர்ந்து தந்தையை சுட்டுக் கொலை செய்த மகன்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. உ.பி-யில் கொடூரம் !

முதியவர் ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியுடன் சேர்ந்து தந்தையை சுட்டுக் கொலை செய்த மகன்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. உ.பி-யில் கொடூரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சத்பால் (வயது 65). இவருக்கு ஹரிஷ், விபின் சிங் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மனைவி இறந்துவிட்டதால் சத்பால் தனது மூத்தமகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

முதலில் சத்பால் இளையமகன் வீட்டில் வசித்துவந்ததுள்ளார். அப்போது இளைய மகன் விபின் சிங், மருமகள் பூஜாஆகியோருக்கு ஒரு டிராக்டர் மற்றும் ஒரு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள் சொந்தமாக பால் பண்ணை வைக்கவும் சத்பால் உதவியுள்ளார்.

மனைவியுடன் சேர்ந்து தந்தையை சுட்டுக் கொலை செய்த மகன்.. வெளிவந்த அதிர்ச்சி காரணம்.. உ.பி-யில் கொடூரம் !

அதன்பின்னர் அதில் இருந்து வரும் வருமானத்தில் மூத்த மகனுக்கு உதவுமாறு இளையமகனிடம் சத்பால் கேட்ட நிலையில், அது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இளையமகன் மற்றும் சத்பாலுக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததால் அவர் தனது மூத்த மகனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியே சென்ற சத்பால் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அவரின் மூத்த மகன் மற்றும் அவரின் மருமகன் ஆகியோர் சேர்ந்து அவரை சுட்டுக் கொலை செய்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலிஸார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories