இந்தியா

தொடரும் சோகம்.. நடனமாடும் போதே மயங்கி விழுந்து மீண்டும் மற்றொரு வாலிபர் உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் சோகம்.. நடனமாடும் போதே மயங்கி விழுந்து மீண்டும் மற்றொரு வாலிபர் உயிரிழப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட இந்தியாவில், சபீக நாட்களாக நடனமாடிக் கொண்டிருக்கும் போதே வாலிபர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் நடனமாடிக் கொண்டிருக்கும் போதே குஜராத் இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் வன்சாரா.

தொடரும் சோகம்.. நடனமாடும் போதே மயங்கி விழுந்து மீண்டும் மற்றொரு வாலிபர் உயிரிழப்பு!

இவர் பாரியாவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குச்சிகளை வைத்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சோர்வடைந்த ரமேஷ் வன்சாராவிடம் இருந்து மற்றொருவர் குச்சியை வாங்க முயன்றபோது அவர் அப்படியே மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories