இந்தியா

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !

கட்டட வேலைக்கு சென்றபோது தங்களது 7 மாத குழந்தையை விட்டு சென்றதால் அந்த குழந்தையை தெருநாய் கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது நாடெங்கும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக ஆங்காங்கே பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக கேரளாவில் கூட தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்பட்டது.

கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காசர்கோடு பகுதியில் மட்டும் கடந்த மாதம் 10 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோழிக்கோடு பகுதியில் சிறுவன் ஒருவனை நாய்க் கடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !

இது போன்ற சம்பவங்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் காசர்கோடு பகுதியில் தெருநாய்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்க ஒருவர் AIRGUN வகை துப்பாக்கியை ஏந்தியபடியே ஒருவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் தெரு நாய்களிடம் இருந்து தங்களை பாதுகாக்குமாறு மரத்தில் ஏறி அமர்ந்து ஒருவர் தனிநபர் போராட்டமும் நடத்தினார்.

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !

இந்த நிலையில் தற்போது நொய்டாவில், 7 மாத பச்சிளம் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், செக்டார் 100 பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு தற்போது கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. இதனால் சம்பவத்தன்று கட்டட தொழிலாளிகளான தம்பதி தங்கள் 7 மாத ஆண் குழந்தையுடன் வேலைக்கு வந்துள்ளனர்.

அப்போது தங்களது குழந்தையை அருகில் விட்டுவிட்டு, பணிகளை செய்துகொண்டிருந்தனர். அப்போது வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகுதிக்கு திடீரென வந்த தெரு நாய் ஒன்று, அந்த குழந்தையை பார்த்துள்ளது. பின்னர் அதன் அருகே வந்து குழந்தையை சரமாரியாக கடித்துள்ளது. இதில் வலி தாங்காத குழந்தை கதறி அழுதுள்ளது.

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !

குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், தெரு நாயை துரத்தி பின்னர் குழந்தையை மீட்டனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தையை கண்ட பெற்றோர் துடிதுடித்து போனர். இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்று குழந்தை இறந்தது.

கட்டட வேலைக்கு சென்ற பெற்றோர்.. தனியாக இருந்த 7 மாத பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய தெரு நாய் !

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டட வேலைக்கு வந்த தம்பதியினரின் 7 மாத பச்சிளம் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்துள்ளதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories