இந்தியா

சிறுமியை கடத்தி போதையாக்கி பாலியல் வன்கொடுமை.. 4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. கேரளத்தில் அதிர்ச்சி !

சிறுமியை கடத்தி போதை பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலிஸார் தேடி வருகின்றனர்.

சிறுமியை கடத்தி போதையாக்கி பாலியல் வன்கொடுமை..  4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. கேரளத்தில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் கிராமத்தில் வசித்துவந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் தேடிய சிறுமியின் பெற்றோர் அவர் கிடைக்காததால் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

கிடைத்த துப்புகளின் அடிப்படையில் பல இடங்களில் விசாரணை நடத்திய போலிஸார் இறுதியில் ஆகஸ்ட் மாதத்தில் திருவனந்தபுரத்தில் இருந்த வீட்டில் இருந்த சிறுமியை மீட்டனர். அவரை மீட்டபோது சிறுமி போதைக்கு அடிமையாகி மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியை கடத்தி போதையாக்கி பாலியல் வன்கொடுமை..  4 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்.. கேரளத்தில் அதிர்ச்சி !

இந்த நிலையில், தற்போது நல்ல நிலைமையில் இருக்கும் சிறுமியிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. தெருவில் நடந்து சென்ற சிறுமியை கடத்திய 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட பல இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், சிறுமிக்கு அதிக அளவில் போதைப்பொருள் அளித்து மயக்கநிலையிலேயே வைத்துள்ளனர். அந்த நிலையிலும் சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த தகவல் கேரளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories