இந்தியா

அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?

குஜராத் துறைமுகத்தில் அடுத்தடுத்து போதைப் பொருள் சிக்கி வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகங்களில் தொடர்ச்சியாகப் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பலரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. இதனால் குஜராத் துறை முகங்களைப் போதைப் பொருட்களைக் கடத்துவதற்குப் புகலிடமாக மாறியுள்ளதா என்ற கேள்வியை காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?

இந்நிலையில் மீண்டும் ரூ.350 கோடி மதிப்பில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜகாவ் துறைமுகத்தில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு ஒன்றின் நடமாட்டம் இருந்ததைக் கடலோர காவல் படையினர் கண்டிருந்துள்ளனர்.

அடுத்தடுத்து சிக்கும் போதைப் பொருள்.. கடத்தல்காரர்களுக்கு புகலிடமாக மாறும் குஜராத் துறைமுகங்கள்?

இதையடுத்து அந்த படகை அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். பிறகு படகை சோதனை செய்தபோது ரூ. 350 கோடி மதிப்பில் ஹெராயின் போதைப் பொருட்களைப் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் போலிஸார் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் படகிலிருந்த 6 பேரை கைது செய்து போதைப் பொருள் எங்கே கடத்தி செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories