இந்தியா

“14 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - சரிபாதியாக சரிந்த வளர்ச்சி” : மோடி ஆட்சியில் திணறும் இந்திய சேவைத் துறை!

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான பாதிப்பை இந்திய சேவைத் துறை சந்தித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“14 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - சரிபாதியாக சரிந்த வளர்ச்சி” : மோடி ஆட்சியில் திணறும் இந்திய சேவைத் துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் சேவைத்துறை வளர்ச்சி கடந்த 6 மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளது. ‘எஸ் அண்ட் பி குளோபல் இந்தியா சர்வீசஸ் பர்சேசிங் மேனேஜர்ஸ்’ (Purchasing Managers’ Index - PMI) ஆய்வின் படி, செப்டம்பர் மாதத்தில் இந்திய சேவைத் துறையின் வளர்ச்சி 54.3 புள்ளிகளாகச் சரிந்துள்ளது.

முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் சேவைத்துறை வளர்ச்சி 57.2 புள்ளிகளாக இருந்த நிலையில், அது கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் நிலையில், இந்திய சேவைதுறை செப்டம்பர் மாதம் வர்த்தகம் மற்றும் பணிகளில் ஏற்பட்ட மந்த நிலையில் 6 மாத சரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

“14 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி - சரிபாதியாக சரிந்த வளர்ச்சி” : மோடி ஆட்சியில் திணறும் இந்திய சேவைத் துறை!

பொதுவாக வளர்ச்சிக் (PMI) குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் அந்தத் துறை வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள். எனினும், 57.2 புள்ளிகளில் இருந்து 54.3 புள்ளிகளாக குறைவது சரிவாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய சேவைத் துறை மார்ச் மாதத்தில் இருந்து தொடர் வளர்ச்சிப் பாதையில் இருந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில்தான் அது சரிவைச் சந்தித்துள்ளது.

அதுமட்டுமல்ல, செப்டம்பர் மாதத்தில் சேவைத் துறை மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்த காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் சேவைத் துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைவாகவே உருவாக்கப்பட்டு இருப்பது பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories