இந்தியா

சமூக வலைதளத்தால் வந்த வினை.. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 மருத்துவர்கள்: உ.பியில் பகீர் சம்பவம்!

உத்தர பிரதேசத்தில், மூன்று மருத்துவர்கள் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளத்தால் வந்த வினை.. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 மருத்துவர்கள்: உ.பியில் பகீர் சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக கெய்லி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் சித்தார் என்பவரது அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் நட்பாகப் பேசி பழகி வந்துள்ளது.

பின்னர் மருத்துவர் சித்தார்த்தைச் சந்திப்பதற்காக இளம் பெண் ஆகஸ்ட் 10ம் தேதி பஸ்திக்கு வந்துள்ளார். பிறகு அவரை மருத்துவமனை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார் மருத்துவர்.

சமூக வலைதளத்தால் வந்த வினை.. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 மருத்துவர்கள்: உ.பியில் பகீர் சம்பவம்!

அங்கு இளம் பெண்ணை சித்தார் உள்ளிட்ட 3 மருத்துவர்கள் கூட்டாகச் சேர்த்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் பஸ்தி மாவட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளத்தால் வந்த வினை.. இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 3 மருத்துவர்கள்: உ.பியில் பகீர் சம்பவம்!

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் மூன்று மருத்துவர்களும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இளம் பெண்ணை 3 மருத்துவர்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories