இந்தியா

கட்டி முடிக்கும் முன்பே சீட்டுக்கட்டு போல இடிந்து விழுந்த பாலம்.. குஜராத்தில் அதிர்ச்சி !

குஜராத்தில் கட்டி முடிக்கும் முன்னரே பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டி முடிக்கும் முன்பே சீட்டுக்கட்டு போல இடிந்து விழுந்த பாலம்.. குஜராத்தில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள போர்சாத் சவுக்கில் என்ற பகுதியின் தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திடீரென இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மேம்பாலத்தின் அடியில் உள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோவை பகிர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்திலேயே இதுபோன்று நடந்துள்ளதாக, காங்கிரஸ் தேசிய ஊடக குழு உறுப்பினர் சுரேந்திர ராஜ்புத் விமர்சித்துள்ளார்.

தனது பதிவில், "இது கடவுளின் செயல் அல்ல, மோசடிகளின் செயல் இது, மோடியின் குஜராத் மாடலின் வழியில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories