இந்தியா

இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற பிரபல YOUTUBER-ருக்கு நேர்ந்த துயரம்- ரசிகர்கள் அதிர்ச்சி !

பிரபல YOUTUBER அபியுதய் மிஸ்ரா இரு சக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற பிரபல YOUTUBER-ருக்கு நேர்ந்த துயரம்- ரசிகர்கள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபியுதய் மிஸ்ரா. ஆன்லைன் வீடியோ கேம்களில் வித்தகராக இவர், அது போன்ற விளையாட்டுகளில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

குறுகிய காலத்திலேயே இவரின் யூடியூப் சேனலுக்கு ஏராளமான ரசிகர்கள் வரத்தொடங்கியுள்ளனர். 'Skylord' என்ற பெயரில் செயல்படும் இவரின் யூடியூப் சேனலை 1.64 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமிலும் அவரது கணக்கை 3.50 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

 இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்ற பிரபல YOUTUBER-ருக்கு நேர்ந்த துயரம்- ரசிகர்கள் அதிர்ச்சி !

இவர் தனது இருசக்கர வாகனத்தில் போபாலில் இருந்து 122 கிமீ தொலைவில் உள்ள சோஹாக்பூருக்கு சென்றுகொண்டிருந்த போது அவரது பைக் மீது லாரி ஒன்று மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவரை பின்தொடரும் நபர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories