இந்தியா

திருமணம் செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

ஜார்க்கண்டில் திருமணம் செய்யச் சொன்ன காதலியைக் காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்  செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜார்க்கண்ட் மாநிலம், ஹல்டியா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி காதலி வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரை பார்ப்பதைத் தவிர்த்து வந்துள்ளார்.

திருமணம்  செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்க சண்டையும் வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் படி காதலனிடம் வலியுறுத்தியுள்ளார்.

திருமணம்  செய்யச் சொன்னதால் ஆத்திரம்.. காதலியை கொலை செய்த வாலிபர்: ஜார்க்கண்டில் அதிர்ச்சி!

இதில் ஆத்திரம் அடைந்த காதலன் அடித்தே காதலியைக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரே காவல்நிலையம் சென்று சரணடைந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories