இந்தியா

நீரில் மூழ்கிய புல்டோசர்..சேதமடைந்த பாலத்தை இடித்த போது நடந்த அசம்பாவிதம்.. உ.பியில் அதிர்ச்சி !

உத்தரபிரதேசத்தில் சேதமடைந்த பாலத்தை இடித்த போது புல்டோசர் நீரில் மூழ்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீரில் மூழ்கிய புல்டோசர்..சேதமடைந்த பாலத்தை இடித்த போது நடந்த அசம்பாவிதம்.. உ.பியில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் பாயும் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த கால்வாய் பாலம் சேதமடைந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கூறி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அதை சீரமைக்க அரசு முன்வந்தது. அந்த பாலத்தை இடித்து அதே இடத்தில் புதிய பாலத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கங்கை நதியின் கால்வாயின் ஒருபக்கத்தில் இருந்து புல்டோசர் மூலம் பாலத்தின் மற்றொரு பகுதி இடித்து தகர்க்கப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக புல்டோசர் நின்றுகொண்டிருந்த பகுதியும் இடிந்து விழுந்தது. இதில் புல்டோசர் தலைக்குப்புற கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியது.

இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த புல்டோசர் டிரைவரை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories