இந்தியா

பாம்பை வைத்து ரீல் வீடியோ.. பாம்பை கழுத்தில் சுற்றியபோது சாமியாருக்கு நேர்ந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி!

உத்தரப்பிரதேசத்தில் பாம்பை வைத்து ரீல் வீடியோ செய்த சாமியார் பாம்பு கடித்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பை வைத்து ரீல் வீடியோ.. பாம்பை கழுத்தில் சுற்றியபோது சாமியாருக்கு நேர்ந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வருகிறார். இதே கிராமத்தில் சுபேதார் என்பவர் வாகனங்களை பழுதுபார்க்கும் கடையினை நடத்தி வருகிறார்.

இவரின் கடைக்கு நாகப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அந்த பாம்பை சுபேதார் கொல்ல முயன்றபோது அங்கு சாமியார் வந்துள்ளார். வந்தவர் அந்த பாம்பை கொல்ல வேண்டாம் என்ற சுபேதாரிடம் கூறியுள்ளார்.

பாம்பை வைத்து ரீல் வீடியோ.. பாம்பை கழுத்தில் சுற்றியபோது சாமியாருக்கு நேர்ந்த சோகம்.. உ.பியில் அதிர்ச்சி!

இதனால் சுபேதாரும் பாம்பை கொல்லாமல் விட்டுள்ளார். பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் அதனை ஒரு பெட்டியில் அடைத்து தன்னுடன் கொண்டுசென்றுள்ளார். பின்னர் இந்த பாம்மை வைத்து சமூகவலைத்தளத்தில் ரீல் வீடியோ எடுத்து அதனை வெளியிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அப்படி தனது கழுத்தில் பாம்பை சுற்றிக் கொண்டு போஸ் கொடுப்பது போல ரீல் ஒன்று வெளியிடும் போது, பாம்பு சாமியாரை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories