அரசியல்

"ஆளுநர் எல்லைமீறி செயல்படுகிறார்" -முதல்வர் விமர்சனம்.. பஞ்சாபில் உச்சம் தொட்ட மாநில அரசு-ஆளுநர் மோதல் !

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எல்லைமீறி செயல்பட்டு வருகிறாா் என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் கூறியுள்ளார்.

"ஆளுநர் எல்லைமீறி செயல்படுகிறார்" -முதல்வர் விமர்சனம்.. பஞ்சாபில் உச்சம் தொட்ட மாநில அரசு-ஆளுநர் மோதல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு நடைபெற்று வருகிறது. அங்கு தற்போதைய ஆளுநராக தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை ஆளுநர்களை வைத்து ஒன்றிய அரசு மறைமுக அரசியல் செய்வதுபோல பஞ்சாபிலும் ஆளும் மாநில அரசை எதிர்த்து ஆளுநர் செய்யப்பட்டு வருகிறார். இதனிடையே டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாகவும் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசுவதாகவும் குற்றம்சாட்டிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோரினார். பின்னர் அந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றியும் பெற்றார்.

"ஆளுநர் எல்லைமீறி செயல்படுகிறார்" -முதல்வர் விமர்சனம்.. பஞ்சாபில் உச்சம் தொட்ட மாநில அரசு-ஆளுநர் மோதல் !

இதேபோல தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக பஞ்சாப் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி சாட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலில் கருத்தை பின்பற்றி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக பக்கம் தாவவில்லை என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்குகோர உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.

இதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை கூட்ட அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக மட்டும் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட பஞ்சாப் சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை எனக் கூறி தனது முந்தைய உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது திரும்பப்பெற்றுள்ளார். மேலும், கூட்டத்தொடா் நிகழ்வுகள் குறித்து விளக்கமளிக்க வேண்டுமாறும் கூறினார்.

"ஆளுநர் எல்லைமீறி செயல்படுகிறார்" -முதல்வர் விமர்சனம்.. பஞ்சாபில் உச்சம் தொட்ட மாநில அரசு-ஆளுநர் மோதல் !

இந்த நிலையில், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு ஆளுநா் அனுமதி அளிப்பது சம்பிரதாய நிகழ்வே. கூட்டத்தொடா் நிகழ்வுகள் குறித்து அவை நடவடிக்கைகள் ஆலோசனைக் குழுவே முடிவு செய்யும்.அந்த விவரங்களைக் கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஆளுநரும் கோரியதில்லை. அடுத்து, கூட்டத்தொடரின்போது நிகழ்த்தப்படும் அனைத்து உரைகளுக்கும் அனுமதி பெற வேண்டுமென ஆளுநா் கோருவாா். ஆளுநா் எல்லைமீறி செயல்பட்டு வருகிறாா்’’ என்று குறிப்பிட்டிருந்தாா். இதன்மூலம் பஞ்சாபிலும் மாநில அரசு,ஆளுநர் மோதல் உச்சம் தொட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories