இந்தியா

தோல்வி பயம்.. ஆம் ஆத்மியை நசுக்க பார்க்கும் பா.ஜ.க: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

குஜராத் தேர்தலில் தோல்வி பயம் காரணமாக ஆம் ஆத்மி கட்சியை பா.ஜ.க நசுக்கப்பார்கிறது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

தோல்வி பயம்.. ஆம் ஆத்மியை நசுக்க பார்க்கும் பா.ஜ.க: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க தொடர்ச்சியாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது போல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி கட்சி இந்த தேர்தலில் களம் கண்டுள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்திற்குத் தொடர்ச்சியாகப் பயணம் செய்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

தோல்வி பயம்.. ஆம் ஆத்மியை நசுக்க பார்க்கும் பா.ஜ.க: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

அதேபோல் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க அரசின் அவலங்களை வெளிப்படுத்திப் பேசிவருகிறார். டெல்லி, பஞ்சாபில் ஆட்சியை பிடித்ததுபோல் குஜராத்திலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதனால் பா.ஜ.க தலைமையிடம் பீதியடைந்துள்ளது.

இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியிலும் பா.ஜ.க ஈடுபட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.கவின் சதித்திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் முறியடித்து தனது பெரும்பான்மை நிரூபித்துக் காட்டினார்.

தோல்வி பயம்.. ஆம் ஆத்மியை நசுக்க பார்க்கும் பா.ஜ.க: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்நிலையில் தங்களுக்கு பெருகி வரும் ஆதரவால் ஆம் ஆத்மி கட்சியை பா.ஜ.க நசுக்கப்பார்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், " பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய பா.ஜக அரசு ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள், தலைவர்களை ஊழல் வழக்கில் சிக்க வைக்கப் பார்க்கிறது.

குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சிக்குப் பெருகி வரும் பலத்தை ஜீரணிக்க முடியாமல் ஊழல் வழக்கில் சிக்கவைத்து மிரட்டப்பார்க்கிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களின் உரிமையாளர்களிடம் பேரம் பேசப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories