இந்தியா

Hall ticket-ல் மோடி, தோனி, ஆளுநர் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள்.. பீகாரில் பரபரப்பு !

பீகார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, தோனி, அம்மாநில ஆளுநர் புகைப்படம் பதிவாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hall ticket-ல் மோடி, தோனி, ஆளுநர் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள்.. பீகாரில் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலத்தில் தர்பாங்கா என்ற பகுதியில் லலித் நாராயணன்ன மிதிலா என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் பல கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் தற்போது தேர்வு நடைபெறள்ளது. அதில் மதுபானி, சமஸ்திபூர், பெகுசாராய் என்ற 3 பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் ஹால் டிக்கெட்டில் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த கல்லூரிகளில் படிக்கும் பி.ஏ., பகுதி III மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் அவர்கள் புகைப்படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் ஆளுநர் சவுகான் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

Hall ticket-ல் மோடி, தோனி, ஆளுநர் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள்.. பீகாரில் பரபரப்பு !

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இது குறித்து தங்கள் தலைமையிடம் தெரிவிக்க, அவர்கள் இந்த முறைகேடு குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தனர். அதன்படி அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கூறுகையில், "இந்த முறைகேடுகள் குறித்து தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கைக் கூட பதிவு செய்யப்படலாம்.

Hall ticket-ல் மோடி, தோனி, ஆளுநர் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள்.. பீகாரில் பரபரப்பு !

மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டன. அந்தந்த மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய, அவர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட உள்நுழைவு விவரங்கள் வழங்கப்பட்டன. ஹால் டிக்கெட்டுகளை தயாரிப்பதற்காக எங்கள் தரவு மையத்தால் செயலாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களை மாணவர்கள் பதிவேற்ற வேண்டும். அவர்களில் சிலர் பொறுப்பில்லமல் விளையாட்டாக ஈடுபட்டதாகத் தெரிகிறது.

Hall ticket-ல் மோடி, தோனி, ஆளுநர் புகைப்படம்.. அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள்.. பீகாரில் பரபரப்பு !

தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பிறகு சரியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவம், பல்கலைக்கழகத்திற்கு கெட்ட பெயரை உருவாக்கியுள்ளது. பிரதமர் மற்றும் கவர்னரின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியதும் மோசமான விஷயம்" என்றார்.

banner

Related Stories

Related Stories