இந்தியா

இது பெட்டா? லாக்கரா ? தொழிலதிபர் படுக்கையறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000,500 நோட்டுக் கட்டுகள்!

தொழிலதிபருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, படுக்கை அறையில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

இது பெட்டா? லாக்கரா ?  தொழிலதிபர் படுக்கையறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000,500 நோட்டுக் கட்டுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் ஆமிர் கான் என்பவர் மீது விளையாட்டு செயலி மூலம் பெருமளவில் பணமோசடி செய்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு புகார் எழுந்தது. இது குறித்து பெடரல் வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றம்சாட்டப்பட்ட அமீர் கான் மற்றும் பலர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு சொந்தமாக கொல்கத்தாவில் உள்ள 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 18 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது பெட்டா? லாக்கரா ?  தொழிலதிபர் படுக்கையறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.2000,500 நோட்டுக் கட்டுகள்!

அதில், கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஆமிர் கானின் வளாகத்தில் நடத்திய சோதனையில், படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2000, ரூ.500 ரூ.200 மதிப்புள்ள நோட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை இன்னும் தொடர்கிறது என்பதால் இன்னும் ஏராளமான தொகை கைப்பற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு, பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது என அமலாக்கதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories