உலகம்

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை.. மருத்துவ உலகை திருப்பி போட்ட பழமையான எலும்புகூடு !

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறுவனின் எலும்புக்கூட்டில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை.. மருத்துவ உலகை திருப்பி போட்ட பழமையான எலும்புகூடு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தோனேசியாவின் போர்னியாவில் உள்ள லியானோ டேபோ என்று குகையில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்தனர. அப்போது அங்கு ஒரு சிறுவனின் எலும்புக்கூடு ஒன்று கிடைத்துள்ளது.

இது தொடர்பாக கார்பன் ரேட்டிங் முறையில் ஆராய்ச்சி செய்தபோது அது 31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறுவனின் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை சோதனை செய்தபோது இடதுபுற காலுக்கு கீழே உள்ள எலும்புகள் இல்லாமல் இருந்துள்ளது தெரியவந்தது.

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை.. மருத்துவ உலகை திருப்பி போட்ட பழமையான எலும்புகூடு !

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள், அந்த கால் எலும்பு உடைந்தது போன்றோ, வேறு ஏதும் விபத்தில் பாதிக்கப்பட்டது போன்றோ எந்த ஒரு தடயமும் இல்லை என்றும் எலும்பை வெட்டி எடுத்தால் அப்படி அது இருக்கிறது என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு அந்த காலத்திலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதனால்தான் அந்த சிறுவனின் இடதுபுற காலுக்கு கீழே உள்ள எலும்புகள் இல்லாமல் இருந்துள்ளது என்றும் கணித்துள்ளனர். மேலும் ஆய்வு முடிவுகளை வைத்து இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஆறு முதல் ஒன்பது ஆண்டுகளுக்கு இந்த சிறுவன் வாழ்ந்துள்ளான் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

31 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை.. மருத்துவ உலகை திருப்பி போட்ட பழமையான எலும்புகூடு !

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஏழாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மனிதனின் எலும்புக்கூடு உறுப்புகள் வெட்டி எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த முடிவுகளின் அடிப்படையில், தற்போது கிடைத்திருக்கும் 31,000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையே உலகின் மிகப் பழமையான அறுவை சிகிச்சை செய்த மனிதனின் எலும்புக்கூடு என அறிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories