இந்தியா

லீவு இல்ல.. ரூ. 50 கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் IT நிறுவன ஊழியர்கள்!

பெங்களூரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஐ.டி நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு டிராக்டர்களில் சென்று வருகின்றனர்.

லீவு இல்ல.. ரூ. 50 கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் IT நிறுவன ஊழியர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பெங்களூர் மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் நகரில் உள்ள சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பு முதல் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு வரை சுமார் 17 கி.மீ புறநகர் வட்டச்சாலை சாலையில் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அமைந்துள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது மழை நீரால் மூழ்கியுள்ளது. இப்பகுதியில் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யாததே இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

லீவு இல்ல.. ரூ. 50 கொடுத்து டிராக்டர்களில் அலுவலகம் செல்லும் IT நிறுவன ஊழியர்கள்!

இந்த மழை வெள்ளம் காரணமாக ஐ.டி நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்றால் தங்களது நிறுவனத்தை வேறு இடத்துக்கு மாற்றுவோம் ஐ.டி நிறுவனங்கள் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்குக் கடிதம் எழுதியுள்ளன.

இந்நிலையில், ரூ. 50 கொடுத்து டிராக்டரில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் அலுவலகம் சென்று வருவது அனைவரையும் அதிர்ச்சியப்பட வைத்துள்ளது. இது குறித்துப் பேசிய ஐ.டி நிறுவன பெண் ஊழியர் ஒருவர், "அலுவலகத்தில் லீவு எடுக்க முடியாது. இதனால் ரூ.50 கொடுத்து டிராக்டர்களில் அலுவலகத்திற்குச் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் டிராக்டரில் ஐ.டி நிறுவன ஊழியர்கள் அலுவலகம் சென்று வரும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories