இந்தியா

Liftல் சிறுவனை கடித்த நாய்.. வேடிக்கை பார்த்த பெண்ணை வசைபாடும் நெட்டிசன்கள்: அதிர்ச்சி வீடியோ!

Liftல் இருந்த சிறுவனை நாய் கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Liftல் சிறுவனை கடித்த நாய்.. வேடிக்கை பார்த்த பெண்ணை வசைபாடும் நெட்டிசன்கள்: அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ராஜ்நகர் எக்ஷ்டன்ஷன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் லிப்டில் நாயுடன் பெண் ஒருவர் ஏறியுள்ளார். அப்போது லிப்டிற்கள் ஏற்கனவே சிறுவன் ஒருவர் இருந்துள்ளான்.

பின்னர் நாயைக் கண்ட சிறுவன் பதற்றமடைந்து சற்று தள்ளி நிற்பதற்காக நகர்ந்துள்ளான். அப்போது நாய் திடீரென சிறுவனின் காலில் கடித்துள்ளது. இதனால் சிறுவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.

அப்போது நாயின் உரிமையாளர் எதுவும் செய்யாமல் அமைதியாகச் சிறுவனை வேடிக்கை பார்த்துள்ளார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் அந்த பெண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரக்கமற்ற பெண் என அவரை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Liftல் சிறுவனை கடித்த நாய்.. வேடிக்கை பார்த்த பெண்ணை வசைபாடும் நெட்டிசன்கள்: அதிர்ச்சி வீடியோ!

ஒரு நெட்டிசன், 'நாளுக்குநாள் மக்கள் தங்கள் உணர்வு மற்றும் இரக்கத்தை இழந்து வருவதற்காக நான் வெட்கப்படுகிறேன்' என பதிவிட்டுள்ளார். இப்படி பலரும் அந்த பெண்மணிக்கு எதிராக தங்களது சமூகவலைதளத்தில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories