இந்தியா

மரத்தை அகற்றியபோது இறந்த பறவைகள்.. நெஞ்சை உருக்கிய வீடியோ.. 3 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ் !

சாலை விரிவாக்க பணிக்காக மரத்தை அகற்றியபோது பறவைகள் இறந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரத்தை அகற்றியபோது இறந்த பறவைகள்.. நெஞ்சை உருக்கிய வீடியோ.. 3 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக தலப்பாற வி.கே.படி என்ற பகுதியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

அப்போது அங்கிருந்த ஒரு மிக்பெரிய புளியமரம் வேரோடு சாய்க்கப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில், அதில் கூடுகட்டி வசித்து வந்த நீர்க்காகம், பலவகை கொக்குகள் உள்ளிட்ட பறவைகளின் குஞ்சுகள் சாலையில் விழுந்து துடித்துக்கொண்டிருந்தன. மேலும், சில அதில் இருந்த சில முட்டைகள் உடைந்து அதில் இருந்த குஞ்சிகளும் சாலையில் விழுந்தன.

மரத்தை அகற்றியபோது இறந்த பறவைகள்.. நெஞ்சை உருக்கிய வீடியோ.. 3 பேரை அதிரடியாக கைது செய்த போலிஸ் !

இந்த அதிர்ச்சி சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட இந்த சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மரத்தை சாய்த்தது தொடர்பாக அங்கிருந்தவர்கள் ஜே.சி.பி ஓட்டுனரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு சமூகஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரங்களை வெட்டும்போது அதில் பறவைக் குஞ்சுகளோ, முட்டைகளோ இருந்தால் அவை பெரிதாகி பறக்கும் வரை மரத்தை வெட்டக் கூடாது என விதி உள்ள நிலையில், அதை மீறி நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலாக நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் ஒப்பந்ததாரர், மரத்தை முறித்தவர்கள் என மூன்று பேரை கைது செய்துள்ளனர். ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நீர்க்காகம் இனப்பெருக்கம் செய்யும். இதைக் கணக்கில் எடுக்காமல் ஒப்பந்ததாரர் மரத்தை முறித்துள்ளார் என போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories