அரசியல்

"மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க "-போலிக்கணக்கை வைத்து PTR-ஐ விமர்சித்து மாட்டிகொண்ட பாஜக!

அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சிக்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் புதிய கணக்கு ஒன்றியை தொடங்கி அவரை விமர்சித்துள்ளனர்.

"மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க "-போலிக்கணக்கை வைத்து PTR-ஐ விமர்சித்து மாட்டிகொண்ட பாஜக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மதுரையில் நடந்த சிண்ட்ரெல்லா சம்பவத்தில் மதுரை பாஜகவின் முகமாக இருந்த மாவட்ட செயலாளர் சரவணன் பாஜகவில் இணைந்தார். மேலும், அந்த சம்பவத்தில் பாஜகவை பல்வேறு கட்சியினரும் கண்டித்து இருந்தனர்.

அதைத் தொடர்ந்து இந்த கலவரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே திட்டமிட்டு செய்ததாக தோலைபேசி உரையாடல் ஒன்று வெளியானது. இதனால் பல்வேறு தரப்பினர் அண்ணாமலையை விமர்சித்தனர்.

மதுரை விவகாரத்தில் தன் நடத்தை வெளிவந்ததை அறிந்து கடும் ஆத்திரத்தில் இருந்த அண்ணாமலை இதற்கு காரணமாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்திருந்தார். அரசியல் நாகரிகம் இல்லாமல் ட்வீட் செய்த அண்ணாமலையின் செயல் தற்போதும் கடுமையாக விமரசிக்கப்பட்டது.

"மண்டை மேல இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்க "-போலிக்கணக்கை வைத்து PTR-ஐ விமர்சித்து மாட்டிகொண்ட பாஜக!

இதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சிக்கும் விதமாக வீடியோ ஒன்றை பாஜக ஆதரவாளர்கள் அதிகள் பகிர்ந்து வந்தனர். அந்த வீடியோவில் பிடிஆர் உடன் பணிபுரிந்தவர் என்ற பெயரில் ஒருவர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மோசமாக பணியாற்றியதனால் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது பக்கத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், "மதவாதிகளுக்கு சாதாரண மூளை இருக்க முடியாது. இந்த பொய்யான கணக்கு வீடில்லாத ஒருவரை தனக்கு எதிராக பேசவைத்திருக்கிறது.

தனது பெயர், வங்கியின் பெயர், வேலையின் பெயர் ஆகியவை சரியாக கூறியுள்ளார். ஆனால், இது நீக்கப்படுவதற்கு முன்பு இந்த முட்டாள்களைப் பாருங்கள்" என எழுதியிருக்கிறார். தனது ட்வீட்டில் இது கணக்கு போலியானது இந்த கணக்கு செப்டம்பர் 2022ல் தான் ட்விட்டரில் இணைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

34 ஃபாலோவர்கள் கொண்டுள்ள இந்த கணக்கு இதுவரை ஒரு சொந்த போஸ்ட் கூட பதிவிட வில்லை என்பது அதை பார்க்கும்போதே தெரிகிறது. இதன்மூலம் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சிக்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் புதிய கணக்கு ஒன்றியை தொடங்கி அதில் யாரோ ஒருவரை பேசவைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories