இந்தியா

நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!

இன்ஸ்டாமூலம் அறிமுகமான பெண்ணுடன் தனியே இருக்க சென்ற தொழிலதிபரை நிர்வாணப்படுத்தி பணம், நகை பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் சமூக வலைதளத்தில் அதிகம் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

சிறிது காலத்திலேயே தொழிலதிபருடன் மிகவும் நெருக்கமான அந்த பெண் தனது கணவர் துபாயில் இருப்பதாகவும், தான் இங்கு வாய்ப்பட்ட தாயுடன் தனியாக இருப்பதாகவும் கூறி பழகி வந்துள்ளார். பின்னர் ஒருநாள் நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்தால் தனிமையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!

இதனால் சபலமுற்ற அந்த தொழிலதிபர், பாலக்காடு அருகே யாக்கரை என்ற இடத்திலுள்ள அந்த பெண் அனுப்பிய முகவரிக்கு சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த அந்த வீட்டுக்குள் அவர் சென்றதும் அந்த பெண் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

பின்னர் சிறிது நேரம் பேசிவிட்டு பெண்ணுடன் படுக்கையறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென வீட்டில் நுழைந்த 5 மர்ம நபர்கள் தொழிலதிபரை அடித்து அவரை மிரட்டி நிர்வாணப்படுத்தியுள்ளனர். பின்னர் நிர்வாணமாக அவரை புகைப்படம், வீடியோ எடுத்த அவர்கள், அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், செல்போன், ஏடிஎம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், கார், ரூ10 ஆயிரம் பணம் போன்றவற்றை பறித்துள்ளனர்.

நிர்வாணப்படுத்தி பணம் பறித்த கும்பல்.. INSTA பெண் மீது கொண்ட சபலத்தால் தொழிலதிபருக்கு நேர்ந்த சோகம்!

பின்னர் கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் தொழிலதிபரை மிரட்டியுள்ளது. இதனால் வேறு வழியின்றி கொடுங்கையூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றால் பணம் தருவதாக அவர் கூறியுள்ளார். இதன் பின்னர் அவரை வாகனத்தில் ஏற்றிய அந்த கும்பல், அவர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளது.

ஆனால், செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தியபோது அதில் இருந்து தொழிலதிபர் தப்பித்து காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்த யூடியூப் நடத்திவரும் கணவன் மனைவி உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories