இந்தியா

ஒரு மாதம் காரில் குடியிருந்த 8 அடி நீள ராஜநாகம்.. காரில் ஊர் ஊராக சுற்றிவந்த உரிமையாளர்!

கேரளாவில் யாருக்கும் தெரியாமல் ஒரு மாதத்திற்கு மேலாக காரில் இருந்த ராஜநாகத்தை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

ஒரு மாதம் காரில் குடியிருந்த 8 அடி நீள ராஜநாகம்.. காரில் ஊர் ஊராக சுற்றிவந்த உரிமையாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சுஜித். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது காரில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது காட்டுப்பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரில் ராஜநாகம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து உடனே வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். பிறகு அங்கு வனத்துறையினர் வந்து தேடிப்பார்த்துள்ளனர்.

ஒரு மாதம் காரில் குடியிருந்த 8 அடி நீள ராஜநாகம்.. காரில் ஊர் ஊராக சுற்றிவந்த உரிமையாளர்!

ஆனால் பாம்பு தென்படவில்லை. இதையடுத்து பாம்பு மீண்டும் காட்டிற்குள்ளே சென்று இருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். பிறகு அவரும் அங்கிருந்து காரை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் திடீரென ஒருநாள் காரில் பாம்பு தோல் இருந்துள்ளது. இதை கண்டு பதற்றமடைந்த அவர் பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ்க்கு தகவல் கொடுத்துள்ளார். அவரும் வந்து கார் முழுவதும் சோதனை செய்துபார்த்தபோது பாம்பு இருந்ததற்கான எந்த தடையமும் இல்லை.

ஒரு மாதம் காரில் குடியிருந்த 8 அடி நீள ராஜநாகம்.. காரில் ஊர் ஊராக சுற்றிவந்த உரிமையாளர்!

இந்நிலையில்,சுஜித்தின் வீட்டின் அருகே ராஜநாகம் செல்வதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். பிறகு உடனே இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு வனத்துறையினர் வந்த 8 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்துச் சென்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக காரில் ராஜநாகம் இருந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories