இந்தியா

3,700 கிலோ வெடிமருந்துகள்.. குவிந்த 30,000 டன் குப்பைகள்.. நொய்டா இரட்டை கட்டட இடிப்பின் விவரம் என்ன ?

சட்டவிரோதமாக கட்டப்பட்ட நொய்டா நகர இரட்டை கட்டடங்கள் வெறும் 9 நொடியில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

3,700 கிலோ வெடிமருந்துகள்.. குவிந்த 30,000 டன் குப்பைகள்.. நொய்டா இரட்டை கட்டட இடிப்பின் விவரம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நொய்டா என்ற தொழில் நகரத்தை கட்டமைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக, மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றைக் கட்ட, 2004ஆம் ஆண்டு சூப்பர்டெக் என்ற நிறுவனத்துக்கு நொய்டா நகர நிர்வாகம் ஒரு இடத்தை வழங்கியது.

கடந்த 2005ஆம் ஆண்டு,10 தளங்கள் கொண்ட 14 அடுக்குமாடிக் கட்டடங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம், 37மீட்டருக்கு மேல் உயரம் கூடாது என்று தடையும் விதிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு, 40 தளங்களுடன் கூடிய இரண்டு அடுக்குமாடி கோபுரங்கள் கட்ட இறுதித் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், இந்த திட்டத்துக்கு அப்போது ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

3,700 கிலோ வெடிமருந்துகள்.. குவிந்த 30,000 டன் குப்பைகள்.. நொய்டா இரட்டை கட்டட இடிப்பின் விவரம் என்ன ?

அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தங்கள் கட்டடங்களிலிருந்து வெறும் 16மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இந்த இரு கோபுரங்களால் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளன என குடியிருப்பு வாசிகள் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் இடிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழங்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

அதைத் தொடர்ந்து கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்றன. மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர், 20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்களை வைத்தனர். அதன்பின்னர் ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை வைத்து இந்த கட்டடம் வெறும் 9 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது.

இந்த கட்டடத்தை இடித்ததன் மூலம் சுமார் 30,000 டன் கட்டுமான கழிவுகள் குவிந்ததாகவும், 1,200 லாரிகளை கொண்டு மூன்று மாதங்கள் இந்த கழிவுகளை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளனர். இதுவே இந்தியாவில் வெடிவைத்து தகர்த்தப்பட்ட மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடமாகும்.

முன்னதாக இந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, அந்த பகுதியில் இருந்த மிருகங்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளே நுழைய யாரும் அனுமதிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories