இந்தியா

தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 9 வயது சிறுவன்.. தெலங்கானாவில் அதிர்ச்சி : பின்னணி என்ன ?

தனது தந்தை மீது காவல் நிலையத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 9 வயது சிறுவன்.. தெலங்கானாவில் அதிர்ச்சி : பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணா - தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு சுங்கபாக பரத் என்ற மகன் உள்ளார். 9 வயதாகும் இவர், அந்த பகுதி பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 9 வயது சிறுவன்.. தெலங்கானாவில் அதிர்ச்சி : பின்னணி என்ன ?

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் இந்த சிறுவன் இருக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ-யிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, "என் அப்பா தினமும் குடித்துவிட்டு என் அம்மாவிடம் தகராறு செய்கிறார்.

என் அம்மாவிடம் தகராறு செய்யும்போது தடுக்க சென்றால், என்னையும் சேர்த்து அடிக்கிறார். அவரை கைது செய்து ஜெயிலில் தூக்கி போடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தந்தை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த 9 வயது சிறுவன்.. தெலங்கானாவில் அதிர்ச்சி : பின்னணி என்ன ?

இதை கேட்டதும் அதிர்ந்த காவல் அதிகாரி, உடனே சிறுவனின் பெற்றோரை வரவழைத்தார். அவர்களுக்கு அங்கே அறிவுரையும் வழங்கினார். மேலும் குடித்துவிட்டு இனி குடும்பத்தில் பிரச்னை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று சிறுவனின் தந்தைக்கு எச்சரிக்கையும் விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories