இந்தியா

அறிவிருந்தா இதை செய்யமாட்டாங்க.. இதுக்கு பேரு இங்கிலீஷ்ல என்ன தெரியுமா? : பாடம் எடுக்கும் PTR !

இந்த விவாதத்தில் ஒரு அறிவார்ந்த கேள்வி கூட எழுப்பப்படவில்லை. இந்த விவாதமே அர்த்தமற்றது" என தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

அறிவிருந்தா இதை செய்யமாட்டாங்க.. இதுக்கு பேரு இங்கிலீஷ்ல என்ன தெரியுமா? :  பாடம் எடுக்கும் PTR !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம், புந்தேல் கண்ட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இலவத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார்.மேலும், "இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என சிலர் கருதுகின்றனர். இந்த மோசமான கலாச்சாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியல் இருந்து இலவசத் திட்டக் கலாச்சாரம் வேரறுக்க வேண்டும்" எனவும் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இலவச திட்டங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளியில் எழுந்தன. மோடியின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், "பொதுமக்களுக்கான சமூக நலத்திட்டங்களை இலவசம் என்று ஒரு குறுகிய அடைப்புக்குள் அடக்கிடாமல், கிராமப்புற ஏழை எளிய மக்களிடையே நடைபெற்றுள்ள பொருளாதாரப் புரட்சி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி பதிலடி கொடுத்தார். இந்நிலையில், இலவச திட்டங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக வழங்கலாமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.அப்போது அதில் அவர் ஒன்றிய அரசை விமர்சித்து பேசியது பெரும் வைரலானது. பலரும் அவரின் அந்த பேச்சை பகிர்ந்திருந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது நெறியாளர் "இலவசம் குறித்த மோடியின் விமரிசனத்துக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்," உத்தரபிரதேசத்தில் சில தினங்களுக்கு பாஜக இலவச பேருந்து சேவையை அறிவித்தது. இதை குறித்து மோடி என்ன சொல்கிறார். தமிழ்நாட்டில் 1 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் இலவசமான கொடுக்கும் திட்டத்தை மோடி வந்து தொடங்கி வைத்தார். இதை எல்லாம் நீங்கள் ஏன் குறை சொல்லவில்லை "என்று பதில் கூறினார்.

அதற்கு கேள்வி எழுப்பிய நெறியாளர் "மோடியின் செயல்பாடு காரணமாக உத்தரபிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது முரணாக உங்களுக்கு தெரியவில்லையா" என கூறினார். அதற்கு பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், "ஒவ்வொருத்தருக்கும் ஒரு நியாயம் என்ற விதத்தில் மோடி செயல்பட்டு வருகிறார். அதை பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த விவாதத்தில் ஒரு அறிவார்ந்த கேள்வி கூட எழுப்பப்படவில்லை. இந்த விவாதமே அர்த்தமற்றது" எனக் கூறினார். அவரின் இந்த விவாதமும் இந்திய அளவில் கவனத்தை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories