இந்தியா

ரூ.20-க்காக 22 ஆண்டுகள் போராட்டம்.. கடைசியில் வெற்றி பெற்ற முதியவர்.. சுவாரஸ்யத்தின் பின்னணி என்ன ?

20 ரூபாய்-க்காக 22 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய முதியவர் தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளார்.

ரூ.20-க்காக 22 ஆண்டுகள் போராட்டம்.. கடைசியில் வெற்றி பெற்ற முதியவர்.. சுவாரஸ்யத்தின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம், மதுராவை சேர்ந்தவர் துங்கநாத் சதுர்வேதி. இவர் கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மதுரா இரயில் நிலையத்தில் ரூ.100 கொடுத்து ரூ.70-க்கான டிக்கெட் எடுத்தார். அப்போது டிக்கெட் கிளார்க் ரூ.70 ரூபாய்க்கு பதில் ரூ.90 பிடித்தம் செய்துவிட்டார்.

இதுகுறித்து சதுர்வேதி கிளார்க்கிடம் கேட்டபோது, அவர் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த இரயில் நிலைய மாஸ்டரிடமும் இது குறித்து கூறிய போது, அவரும் அவருக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிடவில்லை.

ரூ.20-க்காக 22 ஆண்டுகள் போராட்டம்.. கடைசியில் வெற்றி பெற்ற முதியவர்.. சுவாரஸ்யத்தின் பின்னணி என்ன ?

எனவே தன்னுடைய 20 ரூபாயை திருப்பி தர வேண்டி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மதுரா இரயில்வே கிளார்க், இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அரசாங்கம் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுதாக்கலின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் வரும்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படி இரயில்வே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ரூ.20-க்காக 22 ஆண்டுகள் போராட்டம்.. கடைசியில் வெற்றி பெற்ற முதியவர்.. சுவாரஸ்யத்தின் பின்னணி என்ன ?

மேலும் இது போன்ற மனுக்களை சிறப்பு தீர்ப்பாயத்தில்தான் தாக்கல் செய்யவேண்டும் என்று இரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்த ஒரு தீர்ப்பை மேற்கோள்காட்டி வழக்கை தொடர்ந்து நுகர்வோர் தீர்ப்பாயத்தில் விசாரிக்க சதுர்வேதி தரப்பு முறையிட்டது. எனவே இது நுகர்வோர் வழக்காக விசாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 22 ஆண்டுகளாக போராடி வந்த அந்த முதியவர் கடுமையான சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது வந்த தீர்ப்பின்படி, முதியவர் சதுர்வேதிக்கு "30 நாட்களுக்குள் 20 ரூபாயை 12% வட்டியுடன் இரயில்வே திருப்பி கொடுக்கவேண்டும். அப்படி 30 நாட்களுக்குள் கொடுக்கவில்லை என்றால், 15% வட்டியுடன் இரயில்வே கொடுக்க வேண்டியது வரம் என்று நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கு ரூ.15,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரூ.20-க்காக 22 ஆண்டுகள் போராட்டம்.. கடைசியில் வெற்றி பெற்ற முதியவர்.. சுவாரஸ்யத்தின் பின்னணி என்ன ?

வெறும் ரூ.20-க்காக 22 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற முதியவர் சதுர்வேதி இது குறித்து கூறுகையில், "20 ரூபாய்க்காக நான் போராடவில்லை. பொதுமக்களின் நலனுக்காகத்தான் போராடினேன். இது ஒரு நீண்ட சட்டப்போராட்டம். அனைத்து சாட்சிகளும் இருந்தும், விசாரணைக்காக 120 முறை ஆஜராகவேண்டிய நிலை ஏற்பட்டது. பல தடைகள் வந்தபோதும் எனது முயற்சியை நான் கைவிடவில்லை" என்று பெருமிதத்தோடு கூறினார்.

banner

Related Stories

Related Stories