இந்தியா

’நாய் கூட இதை சாப்பிடாது'.. யோகி ஆட்சியின் அவலத்தை கண்ணீருடன் அம்பலப்படுத்திய போலிஸ்!

வேகாத ரொட்டி வழங்குவதாகக் கண்ணீருடன் உத்தர பிரதேச போலிஸார் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’நாய் கூட இதை சாப்பிடாது'..  யோகி ஆட்சியின் அவலத்தை கண்ணீருடன் அம்பலப்படுத்திய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத்தில் காவலர்களுக்கான உணவகம் ஒன்று உள்ளது. இங்குக் காவலர்கள் தினந்தோறும் உணவு சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் காவலர் உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மனோஜ் குமார் என்ற காவலர் கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், "காவலர்கள் 12 மணி நேரம் பணிக்குப் பிறகு இந்த உணவகத்தில் சாப்பிடுகிறார்கள். களைப்பாக வரும் காவலர்களுக்குத் தரமான உணவு கொடுப்பதில்லை. வேகாத ரொட்டியும், தண்ணீர் கலந்த பருப்பும்தான் தினமும் கொடுக்கிறார்கள்.

இந்த உணவை நாய்கூட சாப்பிடாது. இந்த உணவை நாங்கள் எப்படி சாப்பிட முடியும். இதை நாங்கள் சாப்பிட்டு எப்படி எங்கள் கடமை செய்யமுடியும். இது குறித்து பலமுறை புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் இன்று கண்ணீருடன் போராட்டம் நடத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்

’நாய் கூட இதை சாப்பிடாது'..  யோகி ஆட்சியின் அவலத்தை கண்ணீருடன் அம்பலப்படுத்திய போலிஸ்!

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் போலிஸாருக்கு சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது என பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என்பது இந்த வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories