இந்தியா

பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !

பீகாரில் பாஜக- ஜே.டி.யு கூட்டணி முறிந்த நிலையில் அங்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சியமைக்கவுள்ளார்.

பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகாரில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜே.டி.யு). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால் நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்த நிலையில் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.

அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவில் இருந்துதான் முதல்வராக ஒருவரை நியமிக்க வேண்டும் என அதன் கட்சி தலைவர்கள் நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !

சமீபகாலமாக நிதிஷ்குமார் அரசு மீது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதற்கு ஜே.டி.யு தலைவர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க நிகழ்வுகளை நிதிஷ்குமார் புறக்கணித்து வந்தார்.

இந்த நிலையில், இந்த கூட்டணி விவகாரம் தற்போது பட்டவர்த்தமாக வெளிப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சிப்பதாக அந்தக் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் அளித்தப் பேட்டியில், ``லோக் ஜனசக்தி கட்சியை இரண்டாக உடைத்தது போல் ஜக்கிய ஜனதா தளத்தை உடைக்கப்பார்க்கின்றனர். 2000-ம் ஆண்டு தேர்தலின் போதே அதற்கான முயற்சி நடந்தது. ஆனால் நிதிஷ் குமார் அந்த சதியை கண்டுபிடித்து அதை தவிர்த்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !

இந்த நிலையில், பாட்னாவில் ஜே.டி.யூ எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கு பா.ஜ.க - ஜே.டி.யூ கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ்வின் ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைக்கவுள்ளார். தற்போது பீகாரில் 243 இடங்கள் உள்ள நிலையில், அங்கு ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இதில் நிதிஷ்குமாரின் ஜே.டி.யூவுக்கு 45 இடங்கள், லாலுவின் ஆர்.ஜே.டிக்கு 80 இடங்கள், காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 இடங்கள் உள்ளன.

பீகாரில் அடித்துக்கொண்டு பிரிந்த பா.ஜ.க கூட்டணி - எதிரிகளை நண்பனாக்கி கொள்ள நிதிஷ்குமார் முடிவு !

இதனால் இந்த கூட்டணிக்கு தேவையான எண்ணிக்கையை விட 160 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அவர் ஆளுநரை சந்தித்துள்ளார். இதனால் மீண்டும் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கவுள்ளார்.

banner

Related Stories

Related Stories