இந்தியா

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலிஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்த கும்பல்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

டெல்லியில் காவல்நிலையத்திற்குள் புகுந்து போலிஸ் அதிகாரியை மர்ம கும்பல் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலிஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்த  கும்பல்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்ம கும்பல் ஒன்று போலிஸ அதிகாரியைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், 8 அல்லது 10 பேர் கொண்ட கும்பல் காவல்நிலையத்திலிருந்த போலிஸ் அதிகாரியின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் அடிக்கின்றனர்.

மேலும் அவரை மன்னிப்பு கேட்க சொல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதை அங்கிருந்த அனைவரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளது. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ குறித்து போலிஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஆனந்த் விகார் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த காவல்நிலையத்தில் தலைமை காவலரைதான் அந்த கும்பல் தாக்கியதும் தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலிஸ் அதிகாரி கன்னத்தில் அறைந்த  கும்பல்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

ஆனால் ஏன் தலைமைக் காவலரை அந்த கும்பல் தாக்கியது என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. மேலும் இது குறித்து டெல்லி போலிஸாரும் எதுவும் தெரிவிக்காமல் உள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories