இந்தியா

கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற மனைவியை திரும்பி சமாதானபடுத்தி அழைத்து வர 3 நாள் விடுப்பு கேட்ட நபரின் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்ஷாத் அகமத். அந்த பகுதியல் அரசு ஊழியராக இருந்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் தனக்கு 3 நாள் விடுப்பு வேண்டுமென தனது மேலதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த விடுப்பிற்கான காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. மனைவியை சமாதானப்படுத்த leave கேட்ட அரசு ஊழியர்..

அதாவது, "அண்மையில் எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையின் காரணமாக அவர் எனது 3 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வர நான் செல்லவுள்ளேன். இதன்காரணமாக வரும் 4 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நான் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த கடிதம் தொடர்பாக பலரும் தங்களது கருத்தை பலவிதமாக பதிவிட்டு வருகின்றனர். கோபித்து கொண்டு போன மனைவியை சமாதானப்படுத்தி திருப்பி அழைத்து வர கடிதம் மூலம் விடுமுறை கேட்ட கணவனின் செயல் அனைவர் மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories