இந்தியா

9 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !

எண்களை சரியாக கூறாத 9 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஆசிரியர் ஜினேந்திர மோக்ரா என்பவர் 3ம் வகுப்பு மாணவி (9 வயது) ஒருவரை அழைத்து எண்களை தொடர்ந்து கூறுமாறு கூறியுள்ளார்.

அந்த சிறுமியும் ஆசிரியர் கூறியதுபோல 34-வது எண் வரை சரியாக சொல்லிய அந்த மாணவி பின்னர், 35-வது எண்ணை சொல்வதில் தடுமாறியுள்ளார். இதனால் கோவம் அடைந்த அந்த ஆசிரியர் அந்த மாணவியை தாக்கியுள்ளார்.

9 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. வெளிவந்த அதிர்ச்சி வீடியோ !

மாணவியின் கன்னத்தில் அடுத்தடுத்து தாக்கிய அவர், பின் மாணவியின் பின்தலையிலும் அடித்துள்ளார். தொடர்ந்து மாணவி தனது இடத்துக்கு சென்ற போதும் பின்வந்து அவரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதன்பின்னர் சம்மந்தப்பட்ட ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories