இந்தியா

கிரிக்கெட் மட்டையால் காதலரை கொலை செய்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

குடித்துவிட்டு சண்டையிட்டதால் காதலரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த காதலியை போலிஸார் கைது செய்தனர்.

கிரிக்கெட் மட்டையால் காதலரை கொலை செய்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் வினோத் சட்னாம். இவர் ரத்த காயங்களோடு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக விரைந்த பொலிஸார் வினோத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

அங்கு நடந்த பரிசோதனையில் வினோத் மருத்துவமனைக்கு வரும் வழியில் இறந்து கிடந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர்.

கிரிக்கெட் மட்டையால் காதலரை கொலை செய்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

அதில் வினோத்க்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. உடனே விஷ்ணு பண்டாரி என்கிற 48 வயது பெண்ணிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

வினோத்தும் விஷ்ணு பண்டாரியும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். விஷ்ணு பண்டாரிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்துள்ளார். சமீப நாட்களாக வினோத் குடித்து விட்டு விஷ்ணு பண்டாரி மற்றும் அவரது மகனிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் காதலரை கொலை செய்த காதலி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

சம்பவத்தன்று வழக்கம்போல வினோத் குடித்து விட்டு வீட்டில் சண்டையிட்டுள்ளார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமதைந்த விஷ்ணு பண்டாரி மகன் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து வினோத்தை தாக்கியுள்ளார். மேலும், அவரது உறவினர்களும் வினோத்தை தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கேயே விட்டு அவர்கள் சென்றுள்ளனர். இதன் பின்னர் போலிஸார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஷ்ணு பண்டாரி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

banner

Related Stories

Related Stories