இந்தியா

150 வீடுகளில் கொள்ளை அடித்த திருடன்.. சாதாரண சோதனையில் சிக்கியது எப்படி?

ஆந்திராவில், 150 வீடுகளில் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த கொள்ளையனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

150 வீடுகளில் கொள்ளை அடித்த திருடன்..  சாதாரண சோதனையில் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திரா மாநிலத்தில், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடப்பதாக போலிஸாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்களை அடித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சித்தூர் பகுதியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

150 வீடுகளில் கொள்ளை அடித்த திருடன்..  சாதாரண சோதனையில் சிக்கியது எப்படி?

அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த வாலிபரைப் பிடித்து போலிஸார் விசாரணை செய்தனர். இதில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வந்த குண்டூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பது தெரியவந்தது.

மேலும், சித்தூர், திருப்பதி, விஜயவாடா, தெலங்கானா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் பணம், நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளார். அதேபோல் கூட்டாளிகள் யாரும் சேர்த்துக் கொள்ளாமல் தனி ஆளாகவே வீடுகளில் திருடி வந்துள்ளார்.

150 வீடுகளில் கொள்ளை அடித்த திருடன்..  சாதாரண சோதனையில் சிக்கியது எப்படி?

இதுவரை 150க்கும் மேற்பட்ட வீடுகளில் மகேஷ் கொள்ளையடித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவரிடம் இருந்து 400 கிராம் எடையுள்ள தங்க நகைகளை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மகேஷிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories