அரசியல்

வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !

வாக்குப்பதிவு சதவீதத்தில் அசாதாரணமான 6 சதவீத மாறுபாடு சில சந்தேகங்களை எழுப்புகிறது என்று சிபிஎம் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? -  சீதாராம் யெச்சூரி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதியும் நடைபெற்றது. ஆனால் இதில் பதிவான வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வாக்குப்பதிவின் போது வாக்களித்தவர்களின் சதவீதம் நேரம் வாரியாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தது. பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும் தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், இறுதி கட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் காலதாமதம் செய்து வந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சில நாட்களுக்கு பின்னர் இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில் ஏற்கனவே முதல் கட்டத் தேர்தலில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு என்று கூறிய நிலையில் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் 66.14 % வாக்குகள் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இரண்டாம் கட்ட தேர்தலில் 60.96% வாக்குப்பதிவானதாக 26 ஆம் தேதி அறிவித்த நிலையில் இறுதி அறிவிப்பில் 66.71% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? -  சீதாராம் யெச்சூரி கேள்வி !

வழக்கமாக தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்குப்பதிவு விவரம் வெளியிடும் போது அதில் 1 சதவீதத்துக்கும் குறைவான வித்தியாசமே பதிவாகும். ஆனால் திடீரென்று இரண்டு கட்ட தேர்தல்களிலும் 6% உயர்வு ஏற்பட்டது எப்படி? என்ற கேள்வி எழுந்தது. அதுமட்டுமல்லாது வாக்குப்பதிவு சதவீதத்தை மட்டும் வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வெளியிடாதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது. இதனை குறிப்பிட்டு பலரும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு சதவீதத்தில் அசாதாரணமான 6 சதவீத மாறுபாடு சில சந்தேகங்களை எழுப்புகிறது என்று சிபிஎம் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "முதற்கட்ட, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் இறுதி வாக்கு சதவீதத்தை வெளியிட தேர்தல் ஆணையம் ஏன் முறையே 11 நாட்கள், 4 நாட்கள் எடுத்துக்கொண்டது. இதற்கு இதுவரை தேர்தல் ஆணையம் விளக்கமளிக்கவில்லை.

வாக்கு சதவீதத்தை மட்டுமே வெளியிட்ட தேர்தல் ஆணையம் பதிவான வாக்கு எண்ணிக்கையை இதுவரை ஏன் வெளியிடவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தில் அசாதாரணமான 6 சதவீத மாறுபாடு தேர்தல் ஆணையம் குறித்து சில சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த சந்தேகங்களைக் களைய மாநில வாரியாக, மக்களவை தொகுதி வாரியாக, சட்டப்பேரவை தொகுதி வாரியாக முழுமையான ஆரம்ப மற்றும் இறுதி சதவீத வாக்குகள் மற்றும் பதிவான வாக்கு எண்ணிக்கையை வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories