இந்தியா

காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !

காதலுக்கு மறுப்பு தெரிவித்தால், பள்ளி மாணவியை டியூசன் டீச்சரின் கணவர் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒடிசா மாநிலம் கைரா என்ற பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தில் இருப்பவர் தயாநிதி ஜெனா (27). இவரது மனைவி ஒரு ஆசிரியை. எனவே அந்த பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு டியூசன் எடுத்து வருகிறார். டியூசன் பயில வரும் மாணவிகளில் 9-ம் வகுப்பு பிடிக்கும் ஒரு மாணவியை ஜெனா, நோட்டமிட்டுள்ளார். மேலும் அவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

ஜெனா காதலை மறுத்த மாணவியை, மீண்டும் மீண்டும் காதலிக்குமாறு வறுபுறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, டியூசன் வருவதை நிறுத்தியுள்ளார். மாணவி டியூசனுக்கு வருவதை நிறுத்திவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் ஜெனாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் மாணவியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று திட்டம் கொண்டிருந்திருக்கிறார்.

காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !

அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மாணவி கடையில் கலர் பென்சில் வாங்கி விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சமயத்தில், அவரை வழி மறித்த ஜெனா, தன்னுடன் சிறிது நேரம் பேசி விட்டு போகுமாறு கூறியுள்ளார். அதற்கு தான் வீட்டுக்கு போக வேண்டும் என்று கூறி சென்று கொண்டிருந்த மாணவியை வலுக்கட்டயமாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு இடத்திற்கு கூட்டி சென்றுள்ளார்

அப்போது மீண்டும் அந்த மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்திய ஜெனாவுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், கோபம் வந்தது. இதனால் தனது வீட்டின் கழிவறையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து மாணவி மீது ஊற்றி தீயிட்டுள்ளார்.

காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !

இதனால் அலறிய மாணவி, உடல் முழுவதும் நெருப்போடு சாலையில் ஓடியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெனா மனைவியும், மற்ற சிலரும் வந்து உதவி செய்வதற்குள் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். இதனிடையே ஜெனாவை கைது செய்ய முயன்றபோது, அவர் விஷத்தை குடித்து கீழே மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலை புறக்கணித்த மாணவி.. தீ வைத்து எரித்து கொடூரமாக கொன்ற டீச்சரின் கணவர் - ஒடிசாவில் பயங்கரம் !

மேலும் ஜெனா மீது காவல்துறையினர் ஐ.பி.சி. 302, 294, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெனா குணமடைந்து வந்த பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories