இந்தியா

என்னது ஒரு சோளம் 15 ரூபாயா.. வியாபாரியிடம் பேரம் பேசிய பா.ஜ.க அமைச்சர்: வைரல் வீடியோ!

பா.ஜ.க அமைச்சர் சோளம் வியாபாரியிடம் பேரம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்னது ஒரு சோளம் 15 ரூபாயா.. வியாபாரியிடம் பேரம் பேசிய பா.ஜ.க அமைச்சர்: வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக சிவராஜ் சிங் சவுஹான் உள்ளார். இவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் பக்கன் சிங் குலாஸ்தே.

இவர் அண்மையில் தனது காரில் சிவனி என்ற பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் சாலையோரம் வியாபாரி ஒருவர் சோளம் விற்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்து தனது காரை நிறுத்தி சோளம் வாங்கச் சென்றுள்ளார்.

என்னது ஒரு சோளம் 15 ரூபாயா.. வியாபாரியிடம் பேரம் பேசிய பா.ஜ.க அமைச்சர்: வைரல் வீடியோ!

அப்போது அமைச்சர் மூன்று சோளம் தரும்படி வியாபாரியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவரிடம் மூன்று சோளங்களைக் கொடுத்துவிட்டு ஒன்றுக்கு ரூ.15. ஆக மொத்தம் ரூ.45 கொடுங்கள் என கேட்டுள்ளார்.

இந்த விலையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் ஒரு சோளத்தின் விலை 15 ரூபாயா என அந்த வியாபாரியிடம் பேரம் பேசியுள்ளார். இதற்கு அந்த வியாபாரி சார்நீங்க காரில் வருவதற்காக நான் விலையை உயர்த்தி ஒன்றும் கொடுக்கவில்லை. இதுதான் விலை என கூறியுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் மன வருத்தத்துடனே பணத்தை கொடுத்து சோளத்தை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பா.ஜ.க அமைச்சருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதில், குறிப்பாக ஏழைகள் விற்கும் சோளத்தை நீங்கள் விலை உயர்ந்ததாகக் காண்கிறீர்கள். ஆனால் சிலிண்டர், பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி போன்றவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை என இணைய வாசிகள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories