இந்தியா

”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை வெளிப்படுத்திய மாணவி!

நீட் தேர்வின்போது உள்ளாடைகளை அகற்ற சொன்னதால் பல மாணவிகள் கதறி அழுததாக மாணவி ஒருவர் பகிரங்க புகார் ஒன்றை கூறியுள்ளார்.

”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை  வெளிப்படுத்திய மாணவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நேற்று இந்தியா முழுவதும் நடைபெற்றது. இதற்காக வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

வழிகாட்டு நெறிமுறைகளில் ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீண்ட கைகளுடன் (புல் ஹேண்ட்) கூடிய லேசான ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை. குறைந்த குதிகால் (ஹீல்ஸ்0 கொண்ட செருப்புகள் மற்றும் செருப்புகள் அனுமதிக்கப்படும், ஹூக்களுக்கு அனுமதியில்லை.

பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 4. கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.பெண் வேட்பாளர்களை சோதனையிடுவது பெண் ஊழியர்களால் மட்டுமே மூடப்பட்ட அடைப்புக்குள் செய்யப்படும் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை  வெளிப்படுத்திய மாணவி!

அதைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையத்தில், மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின் உள்ளாடைகளில் உலோக ஹூக்குகள் இருப்பதால் அவர்களை தேர்வு மையத்தில் அனுமதிக்கமுடியாது என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் "என் மகள் பல மாதங்கள் நீட் தேர்வுக்கு தயாரான நிலையில், இது போன்ற மனு அழுத்தம் காரணமாக சரியாக தேர்வு எழுதவில்லை. என மகள் அழுதுகொண்டே வெளியே வந்தாள்" எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேசிய தேர்வு முகமை மறுத்திருந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், "தேர்வு எழுதுவதற்கு முன்பு எங்களை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அவர்கள் இரண்டு வரிசைகளாக பிரித்து உள்ளாடைகளில் மெட்டல் ஹூக் பொருத்தப்பட்டுள்ள மாணவிகள் ஒரு வரிசையிலும், அவ்வாறு பொறுத்தப்பாடத உள்ளாடைகளை அணிந்து வந்த மாணவிகள் மறு வரிசையிலும் நிறுத்தப்பட்டனர்.

”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை  வெளிப்படுத்திய மாணவி!

பின்னர் மெட்டல் ஹூக் பொருத்தப்பட்டிருந்த உள்ளாடையை கழட்டசொல்லி அதை அங்கு குவியலாக இருந்த இடத்தில் போட்டார்கள். பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டபோது அங்கு இருபாலரும் ஒரே அறையில் தேர்வு எழுதினோம். இதனால் சங்கடமாக சூழல் ஏற்பட்டு தேர்வில் கவனம் செலுத்த முடியவில்லை.

பின்னர் தேர்வு முடிந்து வெளியேவந்த பின்னர் அந்த குவியலில் எங்கள் உள்ளாடையை கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. அதை கண்டுபிடித்தாலும் அதை அணிய போதிய இடவசதி அங்கு இல்லை. உள்ளாடை கிடைத்தால் செல்லுங்கள் என்று அங்கிருந்தவர்கள் எங்களை விரட்டவே முயன்றார்கள். உடை மாற்ற ஒரேயொரு அறை மட்டுமே இருந்தது. அதுவும் வெளிச்சம் ஏதும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் இது எங்கள் அனைவரையும் மோசமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. அங்கிருந்த பலர் கதறி அழுதனர்" எனக் கூறியுள்ளார். மாணவியின் இந்த குற்றசாட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories