இந்தியா

4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !

பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையை, குரங்கு ஒன்று மாடியில் இருந்து தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேந்தவர் நிர்தேஷ் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !

சம்பவத்தன்று, நிர்தேஷ் வழக்கம்போல் தனது 4 மாத கை குழந்தையை வீட்டிலுள்ள மொட்டை மாடிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாரா விதமாக திடீரென அங்கே குரங்குகள் வந்துள்ளன. இதனை கண்ட நிர்தேஷ், முதலில் அதனை விரட்ட முயன்றுள்ளார். ஆனால், மேலும் குரங்குகள் அங்கே வர, பயந்து போன நிர்தேஷ் ஓட முயற்சித்துள்ளார்.

4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !

அப்போது அவரது கையில் இருந்த குழந்தை கீழே தவறி விழ, அதை குனிந்து எடுக்க முற்பட்டுள்ளார் நிர்தேஷ். ஆனால் அதற்குள்ளே அந்த குழந்தையை பார்த்த குரங்குகள் அதை தூக்கி மொட்டை மாடியில் இருந்து கீழே வீசியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது.

பிறந்து 4 மாதங்களே ஆன குழந்தையை, குரங்கு ஒன்று மாடியில் இருந்து தூக்கி வீசியதில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories