இந்தியா

முகத்தில் விழுந்த பஞ்ச்.. கோமா நிலைக்கு சென்ற குத்துச்சண்டை வீரர் பரிதாப பலி : அதிர்ச்சி வீடியோ !

பெங்களூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் முகத்தில் குத்து வாங்கிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முகத்தில் விழுந்த பஞ்ச்.. கோமா நிலைக்கு சென்ற குத்துச்சண்டை வீரர் பரிதாப பலி : அதிர்ச்சி வீடியோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடரில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். அப்போது ஒரு போட்டியில் மைசூரை சேர்ந்த நிகில் என்ற 23 வயது வீரரும் மற்றொரு வீரரும் போட்டியிட்டனர்.

அப்போது நிகில் அந்த வீரரை காலால் தாக்கமுயன்றபோது சுதாரித்த எதிர்வீரர் திரும்ப நிகிலின் முகத்தில் பலமான குத்து ஒன்றை விட்டுள்ளார்.

முகத்தில் விழுந்த பஞ்ச்.. கோமா நிலைக்கு சென்ற குத்துச்சண்டை வீரர் பரிதாப பலி : அதிர்ச்சி வீடியோ !

இதில் நிலைதடுமாறிய நிகில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால் போட்டி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அவரை மீட்டு உடனடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கோமாவில் இருப்பதாக கூறியுள்ளனர்.

அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போதிய ஏற்பாடுகள் செய்யாததாக கூறி போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் தந்தையும் போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது புகாரளித்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories