இந்தியா

"இந்தி மொழி மட்டும் இந்திய மொழி அல்ல" - 'Nothing' நிறுவனத்தை கண்டித்த தென்னிந்தியர்கள்.! பின்னணி என்ன?

தென்னிந்திய மொழிகளை புறக்கணிப்பதாக Nothing நிறுவனத்தை இணையவாசிகள் கண்டித்து வருகின்றனர்.

"இந்தி மொழி மட்டும் இந்திய மொழி அல்ல" - 'Nothing' நிறுவனத்தை கண்டித்த தென்னிந்தியர்கள்.! பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து தலைநகர் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட Nothing நிறுவனம், கடந்த ஜூலை 12ஆம் தேதி ஃபோன் 1 ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து வரும் ஜூலை 21ம் தேதி, ஃப்ளிப்கார்ட்டி வலைத்தளம் மூலம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Nothing நிறுவனத்தின் ஆலை தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலையில், தற்போது அந்த நிறுவனம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பொதுவாக தனது பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தும் நிறுவனம், அதிக பாலோவ்வர்ஸ் கொண்ட யூடியூபர்கள், இன்ஸ்டாகிராமர்களிடம் கொடுத்து அதை மக்களிடம் பிரபலப்படுத்தும்.

"இந்தி மொழி மட்டும் இந்திய மொழி அல்ல" - 'Nothing' நிறுவனத்தை கண்டித்த தென்னிந்தியர்கள்.! பின்னணி என்ன?

அதே நடவடிக்கையில்தான் தற்போது Nothing நிறுவனம் இறங்கியுள்ளது. ஆனால் ஃபோன் 1 அறிமுகப்படுத்தப்பட்ட போது ஹிந்தி மொழியில் பிரபலமான யூடியூபர்கள், இன்ஸ்டாகிராமர்களிடம் மட்டுமே அது கொடுத்துள்ளது. பிற மொழியில் பிரபலமான குறிப்பாக தென்னிந்திய மொழியில் பிரபலமான யூடியூபர்களை அது புறக்கணித்துள்ளது.

Nothing நிறுவனத்தின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தமிழின் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த காணொளிகளைத் தயாரித்து வரும் பிரபல யூடியூபர் தமிழ் டெக் (Tamil Tech), தென்னிந்தியாவைச் சேர்ந்த சமூக வலைதள ஆளுமைகளுக்கு ஃபோன் 1 வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

இதே கருத்தை, தெலுங்கு,மலையாளம், கன்னட யூடியூபர்களும் வெளியிட இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இன்று காலை முதலே Nothing நிறுவனத்தின் இந்த செயலை கண்டித்து, #DearNothing என்ற ஹாஸ்டாக் ட்ரெண்ட்டாகி வருகிறது.

பிரபல தெலுகு மொழி தொழில்நுட்ப யூடியூபரான பிரசாத் டெக் இன் தன் ட்விட்டர் பக்கத்தில் " இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. அம்மாநில மக்கள் தங்கள் மொழிகளிலேயே காணொளிகளைக் காண விரும்புகிறார்கள்" என ட்விட் செய்துள்ளது.

இந்த ஹாஷ்டாக்கில் பதிவிடும் பொதுமக்கள் இந்தி மட்டுமே இந்தியாவில் மொழி அல்ல, என்றும் நாங்களும் இந்தியர்கள்தான் என்றும் கூறி அந்நிறுவனத்தை விமர்சித்து வருகின்றனர். தென்னிந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்கள் சமீப நாட்களாக BOLLYWOOD படங்களை விட அதிகம் வசூலீட்டி வருகின்றன. மேலும் பல் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை தென்னிந்திய மொழியில் அறிமுகப்படுத்திவரும் நிலையில் Nothing நிறுவனத்தின் இந்த செயலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories