இந்தியா

“அகமதாபாத் பெயர் மாற்றும் சர்ச்சை” : பா.ஜ.க கும்பலுக்கு தெலுங்கானா அமைச்சர் பதிலடி !

ஹைதராபாத் பெயரை மாற்றும் முன் குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரின் பெயரை அதானிபாத் என் மாற்றுங்கள் என மோடிக்கு தெலுங்கானா அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

“அகமதாபாத் பெயர் மாற்றும் சர்ச்சை” : பா.ஜ.க கும்பலுக்கு தெலுங்கானா அமைச்சர் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2020 ஆம் ஆண்டு, ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ.க வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "ஹைதராபாத்தின் பெயரை பாக்யநகராக மாற்ற" பா.ஜ.க-வுக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பா.ஜ.கவின் தேசிய செயற்குழு கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஹைதராபாத் நகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டார்.

“அகமதாபாத் பெயர் மாற்றும் சர்ச்சை” : பா.ஜ.க கும்பலுக்கு தெலுங்கானா அமைச்சர் பதிலடி !

ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பல ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை பாக்யநகர் எனக் குறிப்பிட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேச்சு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன்பின்னர் ஹைதராபாத்தின் பெயர் பாக்யநகர் என மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், “மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும். அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் முடிவு செய்வார்” என கருத்து தெரிவித்தார்.

ஹைதராபாத் பெயர் குறித்த இதுபோன்ற சர்ச்சைகளுக்கு தெலுங்கானா மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி. ராமாராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ள அவர், முதலில் அகமதாபாத் நகரின் பெயரை அதானிபாத் என்று மாற்றுங்கள் எனக் கூறியுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories