உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ராகுல் சிகர்வார் என்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அவரின் புகாரில், "என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ராகுல் விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்" என அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இளைஞர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளன.
அந்த பெண் ராகுல் சிகர்வாவிடம் இருந்து ரூ. 5 லட்சம் பணத்தைப் பறிக்க நினைத்துள்ளார். இதற்காக பாலியல் புகார் திட்டம் தீட்டியுள்ளார். இவரின் இந்த திட்டத்திற்கு வழக்கறிஞர்கள் ஜிதேந்திர ராஜ்புத், நிஷாந்த் குமார், சேகர் பிரதாப் சிங் ஆகிய மூன்று பேர் உதவியுள்ளனர்.
இந்த வழக்கறிஞர்கள் உதவியுடன் ராகுல் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அந்த இளம் பெண் மற்றும் வழக்கறிஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் பறிப்பதற்காக இளம் பெண் பொய் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.