இந்தியா

சீக்கிய கலவர வழக்கு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை - 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் கைது !

1984 ஆம் ஆண்டு சீக்கிய கலவர வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு இதுவரை 15 பேரை கைது செய்துள்ளனர்.

சீக்கிய கலவர வழக்கு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை - 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் கைது !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 1984 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்த அப்போதைய அரசு முனைப்புடன் செயல்பட்டது. இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிரான கலவர விவகாரம் குறித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது.

சீக்கிய கலவர வழக்கு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை - 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் கைது !

இந்த குழு தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போது நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கான்பூரின் டபௌலி பகுதியில் வசித்து வந்த விசாகா சிங், அவரின் மனைவி, மகள், நான்கு மகன்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் விசாகா சிங்கின் மற்ற இரண்டு மகன்கள் எப்படியோ தப்பித்து, மற்ற ஊருக்கு இடம்பெயர்ந்தனர்.

தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருவதை அறிந்தவர்கள், தாங்களாகவே முன் வந்து அந்த கலவரத்தை நேரில் பார்த்த சாட்சியாக வாக்குமூலங்கள் கொடுத்தனர்.

சீக்கிய கலவர வழக்கு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொடூர கொலை - 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவர் கைது !

இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட 65 வயதான யோகேஷ் சர்மா மற்றும் 60 வயதான பாரத் ஷர்மா ஆகிய இருவரை நேற்றிரவு சிறப்புப் புலனாய்வுக்குழு கைது செய்துள்ளது.

ஏற்கனவே இந்த கலவர வழக்கில் இதுவரை 15 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மேலும் 58 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories